பருவமழை எச்சரிக்கை: மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில் 603 மோட்டார் பம்புகள் தயார்
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில் 603 மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாதவரம் முதல் சிறுசேரி வரை 202 மோட்டார் பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி வரை 151 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை 5வது வழித்தடத்தில் 160 பம்புகள் தயாராக உள்ளன.
Advertisement
Advertisement