நடப்பாண்டில் பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகளை தயார்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
சென்னை: நடப்பாண்டில் பருவமழை அதிகமாக பெய்யும் என எச்சரித்துள்ளதால் அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்துள்ளோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; புயல் உருவாக உள்ள நிலையில் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கரைக்கு திரும்ப அறிவுறுத்தி உள்ளோம் என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement