கத்தை கத்தையாக பணம்: அதிகாரி சஸ்பெண்ட்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி மின்வாரிய அலுவலகத்தில் மின் பகிர்மான செயற்பொறியாளராக பணியாற்றியவர் பத்மா. இவர் புதிய மின் இணைப்பு வழங்குதல் மற்றும் மின்வாரிய திட்டங்களை பெறுவதற்கு லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மின்வாரிய அலுவலகத்தில் தனது அறையில் இருக்கையில் அமர்ந்தபடி கையில் கத்தை, கத்தையாக பணத்தை எண்ணியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியான நிலையில் நேற்று முன்தினம் செயற்பொறியாளர் பத்மாவை சஸ்பெண்ட் செய்து மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து நேற்று சிவகாசி மின் பகிர்மான செயற்பொறியாளராக பாபநாசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement