தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நயினார் நாகேந்திரன் கொடுத்த பணம் என்னாச்சு? கலவரம் செய்தால்தான் பாஜ தமிழ்நாட்டில் காலூன்ற முடியும்: பாஜ தலைவர் - இந்து மக்கள் கட்சி நிர்வாகி உரையாடும் ஆடியோ வைரல்

Advertisement

நெல்லை: கலவரம் செய்தால்தான் தமிழ்நாட்டில் பாஜ காலூன்ற முடியும் என்று பாஜ நிர்வாகியுடன் இந்து மக்கள் கட்சி நிர்வாகி உரையாடும் ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த பாஜ கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வனுடன், இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் உடையார் மக்களவைத் தேர்தல் முடிவு பற்றி உரையாடும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த உரையாடல் வருமாறு:

உடையார்: என்னாச்சு, தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் ஜெயிக்காமல் போய் விட்டோமே. வேதனையாக இருக்கிறது. என்ன

சமாச்சாரம். நம்ம ஆட்கள் வேலையே செய்யவில்லை. உள்ளடி வேலை செய்து விட்டார்களா?

தமிழ்ச்செல்வன்: வேலைய ஒழுங்கா செய்யலை என்பது உண்மை.

உடையார்: நயினார் கொடுத்த பணத்தை வீட்டில் கொண்டு போய் வச்சுட்டாங்க.

தமிழ்ச்செல்வன்: அவர் கட்சிக்காரரை பார்த்து கொடுக்கலை. வேண்டிய ஆட்கள், சொந்தக்காரருன்னு ஒரு டீம் போட்டிருந்தனர். அது கொலாப்ஸ் ஆகிடுச்சு. ஏற்கனவே வாங்கியவர்களும் கொடுக்கவில்லை. ஆட்களும் அண்டஸ்டாண்டிங் இல்லை. நாம வருஷம் பூரா வேலை பார்க்கிறோம். கட்சிக்கு வெளியே உள்ள ஆட்கள் இப்போது வந்து சொந்தக்காரர், பந்தக்காரர் என ஒரு பிரச்னை வந்தது.

உடையார் : ஏற்கெனவே இருந்த ஒரு மாவட்ட தலைவர் கட்சியை அழித்தார். அதே நிலைமை இன்று நயினாருக்கு வந்திருக்கு. பெரிய ஆட்கள் எல்லோரும் நலுக்கி விட்டனர். எல்லாரும் 2ம் நம்பர் வேலை பார்க்கின்றனர். தமிழகத்தில் பாஜவின் நிலைப்பாடு 2ம் நம்பர் வேலை தான். நயினாருடன் இருப்பவங்கள்ளாம் வாங்கி சாப்பிட்டு விட்டு சென்று விட்டனர். அதுவும் கட்சிக்காரன்...முதுகில் குத்த விட்டு கொல்வது தான் பெரிய துரோகம்.

கரு நாகராஜன் எங்கே இருந்தார். சரத்குமார் கட்சியில் இருந்தார். அவருக்கு மாநில பொறுப்பு. பாஜவை அழிக்க தமிழகத்தில் முடிவு செய்து விட்டனர். என்ன ஓட்டு வாங்கி இருக்காங்க? மாநில பொறுப்பில் இருக்கும் கேசவ விநாயகம் என்ன செய்து விட்டார். இந்த கட்சியை வளர்க்க என்ன செய்து விட்டார்.

மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை வளர்ச்சி பிடிக்கலை. அதனால் தமிழகத்தில் பாஜவை அழிக்கின்றனர். தமிழகத்தில் பாஜவை அழித்த நம்பர் 1 கேசவ விநாயகம். கலவரம் செய்தால் தான் பாஜ தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியும். பாஜவிற்கு எந்த நாயும் ஓட்டு போடாது. ஓட்டு போட என்ன செய்து விட்டனர். தமிழ்நாட்டில் பாஜவை கட்ட மண்ணாக்கி விட்டனர். இவ்வாறாக அவர்களின் உரையாடல் முடிகிறது.

Advertisement