முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு அபராதம் விதிப்பு
டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கிய சிராஜ் ஆக்ரோஷமாக கொண்டாடி ஹெட்டை பெவிலியன் செல்லும்படி சைகை செய்தார். பதிலுக்கு ஹெட், சிராஜை சில மோசமான வார்த்தைகளால் திட்டியபடி மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்த சம்பவத்தையடுத்து ஐசிசி நடத்தை விதி மீறியதாக சிராஜுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர், வீரர் ஆதரவு பணியாளர்கள், நடுவர் அல்லது மேட்ச் ரெஃப்ரியை துஷ்பிரயோகம் செய்தல்" தொடர்பான ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் வீரர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்களுக்கான விதி 2.13ஐ மீறியதற்காகவும் ஹெட்க்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிராஜ் மற்றும் ஹெட் ஆகியோர் தலா ஒரு டிமெரிட் புள்ளியைப் பெற்றனர். இது கடந்த 24 மாதங்களுக்குள் அவர்கள் செய்த முதல் குற்றமாகும். இரு வீரர்களும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலே முன்மொழிந்த தடைகளை ஏற்றுக்கொண்டனர்.