உக்ரைன்-ரஷ்யா போர்: பிரான்ஸ் அதிபருடன் மோடி பேச்சு
புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பிரான்ஸ் அதிபர் மேக்ரோனுடன் மிகச் சிறந்த உரையாடல் நடைபெற்றது. உக்ரைனில் நிகழும் மோதலை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் உட்பட சர்வதேச, பிராந்திய பிரச்னைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்’ என தெரிவித்துள்ளார்.
Advertisement
மேக்ரோன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பிரதமர் மோடியுடன் பாரிசில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நாங்கள் மேற்கொண்டஆலோசனைகளை அவருக்கு தெரி வித்தேன்’ என்றார். இதற்கிடையே வரும் பிப்ரவரி மாதம் இந்தியா நடத்தவுள்ள ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்கும் அழைப்பை ஏற்றுக்கொண்டதற்காக மோடி நன்றி தெரிவித்தார்.
Advertisement