தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

75 வயதாகிவிட்டது என்று மோடியை ஓய்வுபெற சொல்லிவிட்டால் பாஜ 150 இடம் கூட வெல்ல முடியாது: பாஜ எம்.பி.யின் கருத்தால் புதிய சர்ச்சை, மூத்த தலைவர்கள் அதிருப்தி

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு 75 வயதாகி விட்டது என்று ஓய்வு பெற சொல்லி விட்டால் பா.ஜவுக்கு 150 இடம் கூட கிடைக்காது என்று பா.ஜ எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சால் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிரதமர் மோடிக்கு வரும் செப்​டம்​பர் 17 ஆம் தேதி 75 வயது ஆகிறது. பா.ஜவில் 75 வயதானதும் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் ஓய்வு பெறுவது வழக்கம்.
Advertisement

மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல், ஒன்றிய அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா உள்ளிட்டோரை பா.ஜ இப்படித்தான் ஓய்வு பெற வைத்தது. கடந்த 2019 மற்​றும் 2024 மக்​களவை தேர்​தலின்​போது 75 வயதை எட்​டிய தலை​வர்​களுக்கு பாஜவில் சீட் வழங்​கப்​பட​வில்​லை. இதனால் பிரதமர் மோடியும் 75 வயதானதும் ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த 9ஆம் தேதி நடந்த ஆர்​எஸ்​எஸ் மூத்த தலை​வர் மோரோ பந்த் பிங்க்லே குறித்த புத்தக வெளி​யீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பகவத்,’ உங்​களுக்கு 75 வயது ஆகிறது என்​றால், நீங்​கள் ஒதுங்​கிக் கொண்டு மற்​றவர்​களுக்கு வழி​விட வேண்​டும்’ என்​றார். வரும் செப்​டம்​பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடைவதால் அவரை சுட்​டிக்​காட்​டியே, மோகன் பகவத் இவ்​வாறு கூறிய​தாக எதிர்க்​கட்​சிகள் தெரி​வித்​துள்​ளன.

இதனால் மோகன்பகவத் கருத்து பாஜ​வில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம கோடா தொகுதியைச் சேர்ந்த பாஜ எம்.பி நிஷிகாந்த் துபே, பிரதமர் மோடியின் 75 வயது குறித்தும், அவர் பதவி விலகினால் என்ன நடக்கும் என்பது குறித்தும் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: பிரதமர் மோடி தற்போது 3-வது முறையாக பிரதமராக உள்ளார்.

மோடியின் தலைமை இருந்திருக்காவிட்டால், பாஜ 150 இடங்களில்கூட வெற்றி பெற்றிருக்காது. மோடி வந்தபோது, பாஜவுக்கு அதுவரை வாக்களிக்காத பிரிவினர் குறிப்பாக ஏழை மக்கள், அதிக அளவில் பாஜ பக்கம் திரும்பினர். காரணம், அவர்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. சிலர் இதை விரும்பலாம் அல்லது விரும்பாமல் போகலாம். ஆனால், இதுதான் உண்மை.

அடுத்த 2029 நாடாளுமன்றத் தேர்தலையும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சந்திக்க வேண்டிய கட்டாயம் பாஜவுக்கு இருக்கிறது. பாஜவுக்கு மோடி தேவை. கட்சியின் உறுப்பினராக பிரதமர் மோடியின் தலைமை மீது நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். சர்ச்சைக்குரியதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதை கூறவில்லை. களத்தில் உள்ள யதார்த்தத்தை பிரதிபலிக்கவே இதை கூறுகிறேன்.

மோடியின் பெயர் மட்டுமே கட்சிக்கு வாக்குகளைக் கொண்டு வரும் என்பது அவரது தலைமை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்று. அவரது உடல்நிலை அனுமதிக்கும் வரை, 2047-வளர்ந்த இந்தியா எனும் நமது இலக்கை அடைய அவரது தலைமை நமக்குத் தேவை 75 வயது ஆகிவிட்டால் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி இருக்கலாம். ஆனால், மோடி அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பாஜவுக்கு அவர் தேவை. ஒருவர் ஒப்புக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், ஆனால் அரசியல் கட்சி தலைவரை மையமாகக் கொண்டே இயங்குகிறது. அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடியே தலைவராக இருப்பார். 15-20 ஆண்டுகளுக்கு அவரே தலைவராக இருப்பார் என்றே தெரிகிறது. பிரதமர் மோடி பாஜவை வழிநடத்துவதை நிறுத்தினால், நாடாளுமன்றத்தில் பா.ஜவுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது.

எனவே மோடியின் தலைமையில் 2029 பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருப்பது பாஜவின் கட்டாயம். 2014ல் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பாஜ ஒருபோதும் தனக்கு சாதகமாக இல்லாத ஒரு வாக்கு வங்கியைப் பெற்றுள்ளது. இன்று, மக்கள் மோடியை விரும்புகிறார்கள். பா.ஜ தொண்டர்களுக்கு மோடி தேவை, அவருக்கு நாங்கள் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சுக்கு பதிலடி கொடுப்பது போல் நிஷிகாந்த் துபே எம்பி பேசியிருப்பது பா.ஜ மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. யார் தெரிவித்து அவர் இப்படி பேட்டி அளித்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பா.ஜவில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை: உமா பாரதி சொல்கிறார்

அரசியல்வாதிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஒருபோதும் பொது சேவையிலிருந்து ஓய்வு பெறுவதில்லை. அவர்கள் பணி செய்ய அழைக்கப்படும் வரை தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று மபி முன்னாள் முதல்வரும், பாஜ மூத்த தலைவருமான உமா பாரதி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ மோகன்பகவத் கருத்துக்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. முதலாவதாக, நான் அதன் பாரம்பரிய அமைப்பின் உறுப்பினரும் அல்ல, ஆனால் அந்த சித்தாந்தத்தைப் பின்பற்றுபவன்.

அவரது கருத்துக்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை என்று நான் நம்புகிறேன். அவர்கள் தேவைப்படும் வரை பொது சேவையைச் செய்ய வேண்டும். குரு அறிவைப் போதிக்க வேண்டும், மருத்துவர் நாடித்துடிப்பை உணர வேண்டும். யாராவது உதவிக்காக மன்றாடினால், தலைவர் வெளியே வர வேண்டும்.

ஒரு ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், இசைக்கலைஞர் ஆகியோரின் அறிவு ஒரு தாயின் அறிவு போன்றது. ஒரு தாய்க்கு 80 வயதாகினாலும், அவள் உன்னை நேசிப்பாள். நான் ஓய்வு பெற்றுவிட்டேன் என்று அவள் சொல்ல மாட்டாள், அதனால் நான் உனக்கு உணவு கொடுக்க மாட்டேன். ஓய்வு பெற்ற பிறகும் ஒரு நபர் வாழ்நாள் முழுவதும் சமூகத்திற்கு சேவை செய்ய முடியும். யாரும் அப்படிப்பட்ட காரியத்திலிருந்து ஓய்வு பெறுவதில்லை’ என்றார்.

* மொரார்ஜி தேசாய் 83 வயதில் பிரதமரானார்

பிரதமர் பதவியை வகிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்று கூறிய நிஷிகாந்த் துபே, 83 வயதில் பிரதமராக நியமிக்கப்பட்ட மொரார்ஜி தேசாயின் உதாரணத்தைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில்,’2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை நீங்கள் விரும்பினால், மோடி உடல் நலமுடன் இருக்கும் வரை நீங்கள் அவரை பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு முன்பும் இது நடந்துள்ளது. 83 வயதில் மொரார்ஜி தேசாய் பிரதமராக நியமிக்கப்பட்டார்,’ என்றார்.

* நிஷிகாந்த் துபே பேசியது யார் கருத்து?

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா வெளியிட்ட பதிவில், ‘பாஜவில் மோடியின் அனுமதியின்றி யாரும் பேச முடியாது; துபேவின் கருத்து மோடியின் கருத்தா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

* 75 வயதையும் தாண்டி பா.ஜவில் பதவி வகித்த தலைவர்கள்

75 வயது வரம்பு என்பது பா.ஜவில் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், ஒரு சில தலைவர்கள் 75 வயதையும் தாண்டி கட்சி மற்றும் ஆட்சி பதவியில் இருந்துள்ளதாக பா.ஜ வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2022ல் பாஜ மூத்த தலை​வர் எடியூரப்​பா, கட்​சி​யின் தேசிய செயற்​குழு உறுப்​பின​ராக நியமிக்​கப்​பட்​டார். அப்​போது அவருக்கு 79 வயது. அவர் 75 வயதை தாண்​டிய பிறகும் கர்​நாடக முதல்​வ​ராக பதவி வகித்​தார்.

பாஜ தேசிய செயற்​குழு உறுப்​பின​ராக 76 வயதான சத்​தி​ய​நா​ராயண் ஜாதியா நியமிக்​கப்​பட்​டார். 75 வயதில் ஓய்வு பெற வேண்​டும் என்று பாஜவில் அதி​காரப்​பூர்​வ​மாக எந்த விதி​யும் கிடை​யாது. வரும் 2029 மக்​களவை தேர்​தலிலும் மோடியே பிரதமர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தப்​படு​வார் என்று ஒன்றிய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங் உள்​ளிட்ட பாஜக தலை​வர்​கள் ஏற்​கனவே தெளிவுப்படுத்​தி உள்​ளனர்​.

Advertisement