மோடி, புதினை சிறப்பாக வரவேற்க தயாராகும் ஜின்பிங்
பெய்ஜிங்: சீனா செல்லும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுக்கு சிறப்பான வரவேற்பு தர ஸி ஜின்பிங் திட்டமிட்டுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு ஆக.31, செப்.1ல் சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெற உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, கஜக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் இடம்பெற்றுள்ளன. கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து இந்தியா-சீன உறவில் சுமுக உறவு இல்லாமல் போனது. 7 ஆண்டுகளுக்குப் பின் உறவு சற்று சீரடைந்துள்ளதால் பிரதமர் மோடி சீனாவுக்கு செல்ல உள்ளார்.
Advertisement
Advertisement