2029, 2034 மட்டுமல்ல... 2047 வரை மோடியே பிரதமர் வேட்பாளர்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு
புதுடெல்லி: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘எதிர்காலத்தில் பிரதமர் பதவிக்கு காலியிடம் இல்லை. 2029, 2034 மற்றும் அதன்பிறகும் கூட எங்கள் பிரதமர் வேட்பாளர் மோடிதான்; உலகத் தலைவர்கள்கூட உலக விஷயங்களில் அவரிடம் ஆலோசனை பெறுகிறார்கள். பிறந்தநாளுக்காக உலகத் தலைவர்களிடமிருந்து இவ்வளவு தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளைப் பெறும் பிரதமரை நான் பார்த்ததில்லை. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, முப்படைத் தளபதிகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்தாலோசித்து, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்து ஒன்றிய அரசு எடுத்த பதிலடி நடவடிக்கையே மோடியின் செயல்பாட்டுக்கு சிறந்த உதாரணம். வரும் 2047ம் ஆண்டில் ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கு நிறைவேறிய பிறகு அவர் அரசியலில் இருந்து விலகுவார். ’ என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
Advertisement
Advertisement