தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்குகளுக்காக பிரச்சார மேடையில் பிரதமர் மோடி நடனமும் ஆடுவார் : ராகுல் காந்தி காட்டம்

பாட்னா : அரசியல் சாசனம் அளித்துள்ள கல்வி , வாக்குரிமை, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அனைத்து உரிமைகளையும் பறிக்க பாஜக சதி செய்வதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். பீகார் முசாபர்பூர் நகரில் ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு பொது கூட்டத்தில் பேசிய அவர்," பீகார் மக்களின் விருப்பங்களுக்கு எதிரான ஒரு அரசை அமைக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதற்காக மக்களின் வாக்குகளை திருடும் நோக்கில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பா.ஜ.க.வின் இந்த சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

Advertisement

வாக்குரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அனைத்து உரிமைகளும் அரசியல் சாசனம் அளித்துள்ளது. மக்களின் உரிமைகளை பறிக்கவே பா.ஜ.க. முயற்சி செய்கிறது.பல்கலைக் கழகங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாஜக இயக்குகிறது. வாக்குகளுக்காக பிரச்சார மேடையில் பிரதமர் மோடி நடனமும் ஆடுவார். மராட்டியம், ஹரியானாவில் செய்ததை போல பீகாரிலும் வாக்குகளை திருட முயற்சிக்கின்றனர். பிரதமர் மோடியின் நாடகத்தால் திசை திரும்ப வேண்டாம் என பீகார் மக்களை கேட்டுக் கொள்கிறேன்,"இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Related News