தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோடி சிறந்த மனிதர், என் நண்பர்...அடுத்தாண்டு இந்தியா வர வாய்ப்பு: சூசகமாக தெரிவித்த அதிபர் டிரம்ப்

 

Advertisement

வாஷிங்டன்: இந்தியாவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், பிரதமர் மோடி தனது நண்பர் என்றும் புகழ்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அடுத்த ஆண்டு இந்தியா வர வாய்ப்புள்ளதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்குப் பதிலடியாக, சில இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரை வரி விதித்ததால், இருநாட்டு உறவிலும் வர்த்தகத்திலும் ஒருவித தேக்கநிலை நிலவியது. ஆனால் தற்போது, இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழுக்களும் சமீபத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம், ‘அடுத்த ஆண்டு இந்தியாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளீர்களா?’ என்று நேரடியாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‘ஆம், அதற்கான வாய்ப்பு உள்ளது’ என்று கூறினார். தொடர்ந்து பிரதமர் மோடி குறித்துப் பேசிய அவர், ‘பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் என் நண்பர், நாங்கள் தொடர்ந்து பேசிக்கொள்கிறோம்’ என்று புகழ்ந்துரைத்தார். அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ‘குவாட்’ மாநாட்டுடன் இணைந்து இந்த பயணம் அமையக்கூடும் என்றும் கூறப்படுகிறது. டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், கடந்த 2020 பிப்ரவரியில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Related News