ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது ம.ம.க.
சென்னை: ஆளுநரின் விடுதலை திருநாள் தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ஜனநாயகம், கூட்டாட்சி, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு உறுதி மொழி ஏற்பதற்கான சிறப்பான நாள். ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடு, கருத்து, விழுமியங்களுக்கு முரணானதாக அமைந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுடன் தேவையற்ற மோதல்களை ஆளுநர் உருவாக்கி வருகிறார். அரசு அதிகாரம், மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் செயல்பாட்டை சீர்குலைக்கும் வகையில் ஆளுநரின் செயல்பாடு உள்ளது. தொடர்ச்சியாகச் சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் ரவி செயல்பட்டு வருவதால் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று கூறினார்.