ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்!
Advertisement
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். மும்மொழி திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்று அதிகாரத்தோடு பேசுவதா என்று ஜவாஹிருல்லா கண்டனம். மாநில பட்டியலில் இருந்து கல்வி மாறிய பிறகே எதேச்சதிகார போக்குடன் ஒன்றிய அரசு செயல்படுகிறது. இருமொழி கொள்கையை பின்பற்றும் தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்கப் பார்க்கிறது ஒன்றிய அரசு என்று கூறியுள்ளார்.
Advertisement