தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எம்எல்எஸ் கோப்பை கால்பந்து மெஸ்ஸி மெஸ்மரிசம் மயாமி சாம்பியன்: மண் கவ்விய முல்லரின் வான்கூவர்

 

Advertisement

புளோரிடா: எம்எல்எஸ் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணியை வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மேஜர் லீக் சாக்கர் (எம்எல்எஸ்) கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வந்தன. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணியும், ஜெர்மனியை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் தலைமையிலான வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணியும் மோதின.

போட்டியின் துவக்கம் முதல் மயாமி அணி வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டு கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் பெரும் பகுதி நேரம், அவர்களின் கட்டுப்பாட்டிலேயே பந்து இருந்தது. அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி அட்டகாசமாக ஆடி தனது அணி வீரர்கள் கோல் போடுவதற்கான சூழ்நிலையை உருவாக்கி தந்தார்.

மெஸ்ஸி லாவகமாக தட்டித்தந்த பந்தை, மயாமி அணி வீரர்கள் எடியர் ஒகாம்போ, ரோட்ரிகோ டி பால் கோல்கள் ஆக்கினர். தவிர, மயாமியின் டாடியோ அலெண்டோ 90 6 நிமிடத்தில் தனது அணிக்காக 3வது கோல் போட்டார். மாறாக, வான்கூவர் அணியின் அலி அஹமது, போட்டியின் 60வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே போட்டார்.

அதனால், 3-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மயாமி அணி மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், எம்எல்எஸ் கால்பந்து போட்டியில் இன்டர் மயாமி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. எம்எல்எஸ் கோப்பை தொடரின் அதி மதிப்பு மிக்க வீரர் என்ற கவுரவம், மெஸ்ஸிக்கு அளிக்கப்பட்டது. அவர் கூறுகையில், ‘இந்த தருணத்துக்காகவே நான் நெடுங்காலம் காத்திருந்தேன். ஒரு அணியாக இந்த சாதனையை நாங்கள் அரங்கேற்றி உள்ளோம்’ என்றார்.

Advertisement

Related News