தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எம்எல்சி டி20 சவால் சுற்றில் மல்லுக்கு நிற்கும் டெக்சாஸ்-நியுயார்க்: வெல்லும் அணி இறுதிக்கு முன்னேறும்

Advertisement

டல்லாஸ்: மேஜர் லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் சவால் சுற்றில் டெக்சாஸ் - நியுயார்க் அணிகள் மோத உள்ளன. அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) போட்டியின் 3வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டிள்ளது. லீக் சுற்றில் முதல் 2 இடங்களை பெற்ற வாஷிங்டன் ஃபிரீடம், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் தகுதிச் சுற்றில் மோத இருந்தன. மழையால் ஆட்டம் ரத்தாக, லீக் சுற்றில் முதலிடம் பெற்ற வாஷிங்டன் நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. வாய்ப்பை இழந்த டெக்சாஸ் அணி சவால் சுற்றில் விளையாட உள்ளது.

வெளியேறும் சுற்றில் சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணியை விரட்டிய, எம்ஐ நியூயார்க் அணியும் சவால் சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் டல்லாசில் இன்று நடைபெறும் சவால் சுற்றில் டெக்சாஸ் - நியூயார்க் அணிகள் மோத உள்ளன. ஃபாப் டு பிளெஸிஸ் தலைமையிலான டெக்சாஸ் அணி மழையால் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு தள்ளிப் போனது. அதற்கு பதிலடியாக இன்றைய ஆட்டத்தில் வென்று பைனலில் மீண்டும் வாஷிங்டனை வதைக்க காத்திருக்கிறது. அதற்கு கைகொடுக்க டாரியல் மிட்செல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டெவான் கான்வே, ஜியா உல் ஹக், நூர் அகமது ஆகியோர் காத்திருக்கின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வாஷிங்டனை எதிர்கொள்ளும். தட்டுதடுமாறி சவால் சுற்று வரை முன்னேறியுள்ள நிகோலஸ் பூரன் தலைமையிலான முன்னாள் சாம்பியன் நியுயார்க் அணியிலும் திறமைக்கு பஞ்சமில்லை. ஃபேபியன் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், கைரன் பொல்லார்ட், குயின்டன் டி காக், டிரென் போல்ட், விஜயகாந்த் விசயகாந்த் ஆகியோர் அணியை 2வது முறையாக பைனலுக்கு அழைத்துச் செல்ல காத்திருக்கின்றனர். டெக்சாஸ், முதல் முறையாக பைனலுக்கு முன்னேறும் ஆசையில் இருக்கிறது.

Advertisement