எம்.எல்.ஏ. விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு
01:45 PM Aug 16, 2025 IST
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.