ம.நீ.ம தேர்தல் ஆலோசனை கூட்டம் கமல்ஹாசன் இன்று தொடங்குகிறார்
சென்னை: 2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளது. அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கலந்தாலோசனைக் கூட்டத்தினை அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் நடத்தவுள்ளார். அதன்படி சென்னை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் இன்று (செப்.18) தொடங்கி 21ம் தேதி வரை 4 நாட்களுக்கு மண்டல வாரியாக நடைபெறவுள்ளது.
Advertisement
இன்று சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல கலந்தாலோசனைக் கூட்டமும், நாளை கோவை மற்றும் மதுரை மண்டலத்திற்கும், 20ம் தேதி நெல்லை, திருச்சி ஆகிய மண்டலத்திற்கும், 21ம் தேதி விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநில கூட்டமும் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், கட்சியின் அனைத்து மண்டல நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் கமல்ஹாசன் சந்திக்கிறார்.
Advertisement