முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ, கனிமொழி வாழ்த்து
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரறிஞர் அண்ணாவால் 1949ம் ஆண்டு செப்டம்பரில் திமுக தொடங்கப்பட்டது. அதன் தலைவராக பேரறிஞர் அண்ணா, கலைஞர் அவர்களுக்கு பின், அந்த உன்னதமான திராவிட இயக்கத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த அரிய சாதனைகளை நிகழ்த்தி இன்று 8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிற, இந்திய உபகண்டம் போற்றும் நமது முதல்வர், இன்னும் பல்லாண்டுகள் திமுக தலைவராக, இமாலய சாதனைகளை நிறைவேற்ற, இயற்கைத்தாய் அருள் வழங்கிட மதிமுக சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: நம் திமுகவின் தலைவராக ஏழு ஆண்டுகள் நிறைவு செய்து, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாவும், கலைஞரும் தன் உயிரெனக் காத்து, விட்டுச் சென்ற மாபெரும் பொறுப்பை ஏற்று நடத்தி வரும் அண்ணன் மு.க.ஸ்டாலினின் பணிகள் யாவும் ஜனநாயகவாதிகள் அனைவருக்கும் எழுச்சியூட்டுகின்றன. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.