முதல்வரின் செயலாளர் தந்தை மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: முதலமைச்சரின் செயலாளர் அனு ஜார்ஜ் தந்தை ஜார்ஜ் மேத்யூ மறைவையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: என்செயலாளர் அனு ஜார்ஜ் தந்தை ஜார்ஜ் மேத்யூ மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். உடனடியாக, அனு ஜார்ஜை தொடர்புகொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். அவருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement