கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கான முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கான முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்ட விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
Advertisement
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கான முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டில் காலை உணவுத் திட்டம் என்ற அறிவிப்புக்கு நன்றி; கல்விப் பாதையில் தமிழ்நாடு ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டி என்பதை உறுதிப்படுத்தினீர்கள்.
Advertisement