மிசோரமில் புது மாற்றத்துக்கு வித்திட்டுள்ள ரயில்வே துறை: 11 ஆண்டுகளுக்குப் பிறகு பணிகள் முடிவுக்கு வந்துள்ளன
ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் ரூ.1,021 கோடி மதிப்பில் 51 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதியதாக ரயில் பாதை அமைத்து புது மாற்றத்துக்கு இந்தியா ரயில்வே துறை வித்திட்டுள்ளது. மிசோரம் தலைநகர் ஐஸ்வால், அஸ்ஸாம் சென்சாருடன் இணைக்கும் விதமாக தொடங்கப்பட்டது. பைராபி - சாய்ராங் இடையிலான ரயில் பாதை திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு இதற்கான பணிகளை தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில், பல்வேறு நிர்வாக காரணங்களால் பணிகள் தாமதம் ஆனது. பின்னர் 2014-ல் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது 11ஆண்டுகளுக்கு பிறகு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த புதிய வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிலையில், தற்போது சோதனை ஓட்டம் தீவிரமாகி உள்ளது. பைராபி - சாய்ராங் இடையே 51 கிலோ மீட்டர் தூரம் இந்த புது ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கங்கள், 55 பெரிய மற்றும் 87 சிறிய பாலங்களும் இடையில் அமைக்கப்பட்டுள்ளன. வரலாற்றில் முக்கியமாக பார்க்கப்படும் இந்த புதிய பாதை செங்குத்தான மலைகளில் உச்சியில் அமைந்துள்ள மிசோரம் தலைநகரம் ஐஸ்வால், அஸ்ஸாம் சென்சார் நகர் மட்டுமின்றி நாட்டின் பிறபகுதிகளிலும் நேரடியாக இணைக்கவுள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் 8மணிநேரம் குறைய உள்ளது.