சென்னையில் காணாமல் போன இளைஞர்: காட்டூர் அருகே எலும்புக் கூடாக மீட்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பணத்துற கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது இரண்டாவது மகன் பண்டி 25 வயதான இவர் ஊரில் தினமும் குடித்துவிட்டு தகரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். உருளிய இருந்தால் மகனின் எதிர்காலம் பாழாய் போய்விடும் என நினைத்த வீரபத்திரன் பாண்டியை அழைத்து கொண்டு தம்பரத்துக்கு வந்து இருக்கிறார்.
ரங்கநாதபுரம் 5 வது தெருவில் விடு ஒன்று வாடகைக்கு எடுத்த வீரபத்திரன் மகனோடு சேர்ந்து நெய் விற்பனை செய்து வந்தார். ஊரில் இருந்த போது பண்டி வழக்கில் ஒன்று சிக்கியுள்ளார். இதனால் அவரது பைக்கை போலீசார் பரிமுதல் செய்து இருக்கிறார்கள். இந்த சூழலில் கடந்த மாதம் 8 ஆம் தேதி சிவகங்கை திருவச்சட்டி காவல் நிலையத்தில் இருந்து பாண்டியை தொடர்பு கொண்ட காவலர் ஒருவர் பைக்கை வந்து எடுத்து செல்லுமாறு கூறிள்ளார்.
இதனால் ஊருக்கு சென்று பைக்கை எடுத்து வருவதாக கூறிவிட்டு பண்டி அன்று இரவே சிவகங்கைக்கு ரயில் ஏறி உள்ளார். அனல் பண்டி சிவகங்கைக்கும் போகவில்லை தபாரத்துக்கும் திரும்பி வரவில்லை மகனை பற்றி இந்த தகவலும் தெரியாததால் பதட்டம் அடைந்த வீரபத்திரன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் குடுத்துருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவந்தனர். பாண்டியன் செல்போன் அவர் காணாமல் போனதில் இருந்தே ஸ்விட்ச்ஆஃ செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரின் செல்போன் குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் தான் ஒரு மதத்திற்கு பிறகு பாண்டியன் செல்போனில் வேறுஒருவர் சிம் கார்டு போடு பயன்படுத்தியது தெரியவந்தது.
உடனே போலீசார் அந்த நம்பர் குறித்து விசாரணை செய்தனர் டவர் லொகேஷன் மூலம் திருச்சி யம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை செய்து இருக்கிறார்கள். ஆடு மேய்த்து கொண்டிருந்த போது காட்டூர் ரயில் நிலையம் அருகே செல்போன் மற்றும் 300 ரூப்பை பணம் கிடைத்ததாகவும் செல்போன் டிஸ்பிலே உடைந்து இருந்ததால் அதை கடையில் குடுத்து மாற்றி சிம் கார்டு போடு பயன்படுத்தி வந்ததாகவும் மணிகண்டன் போலீசாரிடம் குறி உள்ளார்.
அதன் பின்னர் போலீசார் மணிகண்டனை அழைத்துக்கொண்டு செல்போன் எடுத்த இடத்திற்கு சென்றனர். அப்பகுதி முழுதையும் ஆய்வுசெய்து இருக்கிறார்கள் அப்போது பண்டி தாம்பரத்தில் இருந்து கிளம்பிய போது போட்டிருந்த ஆடைகள் கிடந்துள்ளது. அதிலுள் மனித எலும்பு துண்டுகள் இருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ந்து போன போலீசார் அணைத்து எலும்பு திண்டுகளையம் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
பரிசோதனை முடிவில் அது பண்டி என தெரியவந்தது. அதன் பின்னர் அரசு மருத்துவமனையில் எலும்புகளை ஒன்றாகி உருவோம் போல் செய்து பாண்டியின் தந்தை இடம் இறுதி சடங்கு செய்ய குடுத்துருக்கிறார்கள்.
தாம்பரத்தில் இருந்து ரயில் மூலம் செல்லும் போது காட்டூர் ரயில் நிலையம் அருகே தவறி விழுந்து உயிரிழந்து பல நாட்கள் ஆனதால் பண்டி எலும்பு கூடாக மாறினார் அல்லது யாராவது அவரை அடித்து கொன்று வீசி விட்டு சென்று இருக்கிறார்களா போன்ற கோணத்தில் விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே பாண்டியின் மரணத்தில் உள்ள மர்மம் விலகும்.