உலக அழகி பட்டத்தை அதிக முறை வென்ற முதல் 10 நாடுகள்: இந்தியா அந்தப் பட்டியலில் உள்ளதா?
டெல்லி: உலக அழகி பட்டம் வென்ற வெற்றியாளர்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் இந்தியா உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் உலக அழகி பட்டம், கடந்த 1951ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் புத்தி கூர்மை, அனைவரையும் கவரும் பதில் உள்ளிட்ட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு உலக அழகி பட்டம் வழங்கப்படுகிறது. 74வது உலக அழகி போட்டி இந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி தாய்லாந்தில் உள்ள இம்பாக்ட் சேலஞ்சர் ஹாலில் நடைபெற உள்ளது. உலக அழகி 2025 போட்டிக்காக உலகம் முழுவதும் காத்திருக்கும் நிலையில், எந்த நாட்டு பெண்கள் அதிக எண்ணிக்கையில் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். டாப் 10 லிஸ்ட் இதோ;
1. அமெரிக்கா
உலக அழகி பட்டம் வென்ற வெற்றியாளர்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியல் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. 1954, 1956, 1960, 1967, 1980, 1995, 1997, 2012, 2022 என மொத்தம் 9 முறை அமெரிக்க பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.
2. வெனிசுலா
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் வெனிசுலா உள்ளது. 1979, 1981, 1986, 1996, 2008, 2009, 2013 என மொத்தம் 7 முறை வெனிசுலா பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.
3. போர்ட்டோ ரிக்கோ
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் போர்ட்டோ ரிக்கோ நாடு உள்ளது. 1970, 1985, 1993, 2001, 2006 என மொத்தம் 5 முறை போர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.
4. பிலிப்பைன்ஸ்
இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் பிலிப்பைன்ஸ் நாடு உள்ளது. 1969, 1973, 2015, 2018 என மொத்தம் 4 முறை பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.
5. இந்தியா
இந்த பட்டியலில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. 1994, 2000, 2021 என மொத்தம் 3 முறை மட்டுமே இந்திய பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.
6. மெக்சிகோ
இந்த பட்டியலில் மெக்சிகோ ஆறாம் இடத்தில் உள்ளது. 1991, 2010, 2020 என மொத்தம் 3 முறை மெக்சிகோ பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.
7. தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா நாடு இந்த பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது. 1978, 2017, 2019 என மொத்தம் 3 முறை தென்னாப்பிரிக்க பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.
8. ஸ்வீடன்
ஸ்வீடன் நாடு இந்த பட்டியலில் எட்டாம் இடத்தை பிடித்துள்ளது. 1955, 1966, 1984 என மொத்தம் 3 முறை ஸ்வீடன் நாட்டு பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.
9. பிரேசில்
இந்த பட்டியலில் பிரேசில் ஒன்பதாம் இடத்தை பிடியதுள்ளது. 1963, 1968 என மொத்தம் 2 முறை மட்டுமே பிரேசில் பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.
10. ஜப்பான்
இறுதியாக, ஜப்பான் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 1959, 2007 என மொத்தம் 2 முறை மட்டுமே ஜப்பான் பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.