தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமிக்கு பாலியல் தொல்லை அதிமுக நிர்வாகிகள் கைது

சேலம்: சேலம் பனங்காடு ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். தேக்வாண்டோ பயிற்சியாளரான இவர், 10க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மாணவிகளை வெளிமாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு அழைத்து செல்வது வழக்கம். கடந்த 6ம் தேதி, பயிற்சிக்காக வெளி மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்க, மாணவிகளை அழைத்து சென்றார். விஜயகுமாரின் உறவினர் இறந்ததாக வந்த தகவலை தொடர்ந்து, மாணவிகளை விஜயகுமாரின் தம்பி கணேசன் பொறுப்பில் விட்டு, துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுவிட்டார். இந்நிலையில் இரவு, கணேசன் பயிற்சிக்கு சென்ற 14 வயது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி அதிர்ச்சியடைந்து பெற்றோரிடம் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

உடனே பயத்தில் கணேசன், சகோதரர் விஜயகுமாரை தொடர்பு கொண்டு, இந்த விவகாரத்தை தெரிவித்துள்ளார். அவர் பயிற்சி நடைபெறும் இடத்துக்கு வந்து, அந்த 14 வயது மாணவியின் செல்போனை பறித்து கொண்டு, வீட்டில் இதுபற்றி கூறக்கூடாது என மிரட்டியுள்ளார். இந்நிலையில், அந்த மாணவி, தோழியின் செல்போனை வாங்கி, தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கவிதா, போக்சோ வழக்குப்பதிந்து பயிற்சியாளர் விஜயகுமாரை கைது செய்தார். தலைமறைவான விஜயகுமாரின் தம்பி கணேசன் போலீசார் சரணடைந்தார். கைது செய்யப்பட்ட விஜயகுமார், அதிமுக கிழக்கு ஒன்றியத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஒன்றிய இணை செயலாளராக உள்ளார். சரணடைந்த அவரது தம்பி கணேசன் ஆண்டிப்பட்டியில் 51வது பூத் அதிமுக கிளை செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement