வரும் 31, 1ம் தேதிகளில் திருச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்
இதைதொடர்ந்து 31ம் தேதி மாலை பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் பணியை பார்வையிடுகிறார். பின்னர் மத்திய பேருந்து நிலையம் அருகே கலையரங்கில் நடைபெறும் விழாவில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், நான் முதல்வன் பணி ஆனை வழங்குதல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதைதொடர்ந்து திருச்சி சுற்றுலா மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். ஆகஸ்ட் 1ம் தேதி காலை சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு அந்தநல்லூர் திருப்பராய்த்துறையில் உள்ள பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்கிறார். பின்னர் தென்பறைநாடு புத்தூரில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதைதொடர்ந்து ஜேஇஇ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சி என்ஐடியில் சேர்ந்துள்ள சின்ன இலுப்பூர் கோம்பை கிராமத்தில் உள்ள மாணவி ரோகினியை சந்தித்து பாராட்டுகிறார். இதைதொடர்ந்து அன்று மதியம் சுற்றுலா மையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். இதைதொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். பின்னர் ஈரோடு மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.