தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் குழு ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசு முறை பயணம்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்: வேளாண்மை துறையின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பான ஆய்வுகள், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற பணிகளுக்காக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளது. இந்தக் குழுவில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
Advertisement

இப்பயணத்தின் முதற்கட்டமாக நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் பல்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கலந்துரையாடலில் காலநிலை மாற்றம், புதிய வகை பயிரினங்கள் அறிமுகம், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், மண்வளம் காப்பதற்கான நடவடிக்கை, பூச்சிநோய் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பது, உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறைகளைத் தீவிரப்படுத்துவது, தோட்டக்கலை பயிர்களான பழ வகைப்பயிர்கள் மற்றும் மருத்துவ பயிர்களை கையாளுதல், அனைத்து வகை பயிர்களிலும் அறுவடைக்கு பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டு முறைகள், உணவு வகைப் பயிர்களில் புதுமையை ஏற்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சியை மேம்படுத்துதல், வேளாண்மைப் பாடங்கள் பயிலும் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன. இங்கு மேற்கொள்ளப்பட்ட கருத்து பரிமாற்றங்களை தமிழ்நாடு முதல்வரின் ஆணையைப் பெற்று தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement