அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி
மதுரை: அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. நேற்று காலை திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடைபெற இருந்த காலை உணவு விரிவாக்கத் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார். அவருக்கு கடுமையான வயிற்று வலி காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் நேற்று காலை மதுரை - மேலூர் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் சேர்ந்ததாகவும், தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Advertisement
Advertisement