தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 2 வாகன ஓட்டுநர்கள். ஒரு வாகன சீராளருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்!!

Advertisement

சென்னை : தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு வாகன ஓட்டுநர்கள். ஒரு வாகன சீராளர் என மூவருக்கும் தலைமைச் செயலகத்தில் இன்று (18.9.2024) பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள். அறிவிப்புகள், அரசின் சாதனைகள், செய்தி வெளியீடுகள், அறிக்கைகள். வேண்டுகோள்கள் அனைத்தும் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் அரும்பணிகளைத் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறையில் காலியாக இருக்கும் திருப்பூர் மாவட்ட ஓட்டுநர் பணியிடத்திற்கு திரு.ஆனந்தன். திருப்பத்தூர் மாவட்ட ஓட்டுநர் பணியிடத்திற்கு திரு.எம். தமிழரசு ஆகியோரையும், மதுரை மாவட்டத்தில் வாகன சீராளர் பணியிடத்திற்குக் கருணை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி.வெ.சித்ராதேவி அவர்களையும் பணி நியமனங்கள் செய்து உரிய ஆணைகளை தலைமைச் செயலகத்தில் இன்று (18.9.2024) நேரில் வழங்கி, வாழ்த்துகள் கூறியதுடன் சிறப்பாகவும் பொறுப்பாகவும் பணிபுரியுமாறும் அறிவுரைகள் வழங்கினார்.இந்நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப.. அவர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு. இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் இயக்குநர்(செய்தி) திரு.எஸ்.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement