சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் :அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
Advertisement
இந்த நிலையில் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ,"சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் . உயர்கல்வித்துறை சார்பில் நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது. தமிழக அரசு இதில் கவனமாக செயல்பட்டு வருகிறது. ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்,"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement