உரங்களுடன் பிற இடுபொருட்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக் கூடாது -அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
10:50 AM Aug 09, 2025 IST
சென்னை : உரங்களுடன் பிற இடுபொருட்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக் கூடாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார். உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விதிகளை மீறி உரங்களை பதுக்கினால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.