அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு ஒன்றிய அரசு குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்கவில்லை
பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஒக்கேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘ஒக்கேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த 8900 கோடி நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிதி ரூ.2500 கோடி வர வேண்டும்.
Advertisement
தற்போது தமிழ்நாடு அரசு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒன்றிய அரசு ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.1700 கோடி நிதி வழங்கவில்லை. புதிதாக தொடங்க உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ரூ.2500 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டியது உள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து ஜல்ஜீவன் திட்டத்திற்கான நிதி வராததால் புதிய கூட்டுறவு திட்டங்களை நிறைவு செய்ய முடியாத சூழல் உள்ளது’’ என்றார்.
Advertisement