ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா: நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
டெல்லி: பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆன்லைனில் பணம் வைத்து நடத்தப்படும் விளையாட்டுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை தடுக்கும் நோக்கில் இந்த மசோதா தக்கல் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம், ஏற்கனவே விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய மசோதாவின் படி ஆன்லைன் மூலம் பணம் வைத்து விளையாடும் சேவையை வழங்குவோருக்கும் இதற்கான பரிவர்த்தனை வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனகளுக்கும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்க முடியும் என்று அவர் கூறினார்.
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை விளம்பரம் செய்வோருக்கு 2 ஆண்டுகள் சிறையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கு படுத்த தேசிய ஆன்லைன் விளையாட்டு ஆணையம் உருவாக்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.