தமிழகத்தில் முதல் முறையாக அரசு பள்ளியில் அகல் விளக்கு திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்!
05:49 PM Aug 09, 2025 IST
புதுக்கோட்டை : தமிழகத்தில் முதல் முறையாக கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அகல் விளக்கு திட்டத்தை தொடங்கிவைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உடல் மற்றும் மன ரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அகல் விளக்கு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.