உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்தை தயாரித்த ஸ்ரீசன் நிறுவனத்தை நிரந்தரமாக மூட விரைவில் முடிவு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் முடிவு!!
சென்னை : உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தை தயாரித்த ஸ்ரீசன் நிறுவனத்தை நிரந்தரமாக மூட விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "கோல்ட்ரிப் மருந்தில் நச்சுத்தன்மை அதிக அளவில் இருப்பதை கண்டுபிடித்தது தமிழ்நாடு. கோல்ட்ரிப் மருந்தை பகுப்பாய்வு செய்து அக்.2ம் தேதியே தடை செய்தோம்.
மத்திய பிரதேசமும் மத்திய அரசும் நச்சுத்தன்மை இல்லை என்று விட்டு விட்டார்கள்.சரியாக ஆய்வு செய்யாத மூத்த மருந்து ஆய்வாளர்கள் 2 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மருந்து நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விசாரணைக்குப்பின் நிரந்தரமாக மூட முடிவு எடுக்கப்படும். ரூ. 1.68 கோடி செலவில் கிண்டி, ஈக்காடுதாங்கலில் பேருந்து நிழற் கூடைகள் அமைக்கப்பட்ட உள்ளன. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கி.மீ தூரத்திற்கு ரூ.621 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம், ஜனவரியில் திறக்கப்படும்."இவ்வாறு தெரிவித்தார்.