திமுக அரசின் மழை நிவாரணப் பணிகள் குறித்து பேச இபிஎஸ்க்கு அருகதை இல்லை": அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சென்னை: திமுக அரசின் மழை நிவாரணப் பணிகள் குறித்து பேச இபிஎஸ்க்கு அருகதை இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சியாக இருந்த போது அவரது செயல்பாடு எப்படி இருந்தது என்பதை மக்கள் அறிவார்கள்.
Advertisement
அவர் பதவியில் இருந்த போது அவரது கால்கள் தரையில் படாமல் பணியாற்றி கொண்டிருந்தார். கொரோனா நோய் தாக்கம் வந்த போது உயிருக்கு பயந்து பூட்டிய வீட்டுக்குள் இருந்தார்கள். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதலமைச்சர் தனது உயிரை துச்சமென மதித்து மக்கள் களத்தில் கொரோனவை வென்று காட்டினார். திமுக அரசின் மழை நிவாரணப் பணிகள் குறித்து பேச இபிஎஸ்க்கு அருகதை இல்லை என தெரிவித்தார்.
Advertisement