மக்கள் பொழுதுபோக்கிற்காகவே விஜயை பார்க்கிறார்கள் : அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
திண்டுக்கல் : சட்டமன்றத் தேர்தலில் 3வது இடத்தைப் பிடிப்பது யார் என சீமானுக்கும், விஜய்க்கும்தான் போட்டி என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அரசியல் விஜய்க்கு அடிச்சுவடி என்பதே தெரியாது. மக்கள் பொழுதுபோக்கிற்காகவே விஜயை பார்க்கிறார்கள். ஆட்சி மாற்றம் வேண்டும் என்று சொன்ன சீமான் 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை சீமானும், விஜயும் 3வது இடத்திற்கு முயற்சிக்கிறார்கள். இவர்களால் ஒரு இடம் கூட வெல்ல முடியாது. தமிழகத்தில் 200 தொகுதிகளை திமுக கைப்பற்றும்; மற்ற கட்சிகள் டெபாசிட் இழக்கும். விஜய்க்கு 9 தொகுதிகளில் மட்டுமே கூட்டம் வந்திருக்கிறது; முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும்போது அதைவிட அதிக கூட்டம் வரும்; யாரோ சொல்லி விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்; விஜயை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது."இவ்வாறு தெரிவித்தார்.