11ம் வகுப்பு படிக்க அமெரிக்கா சென்ற அரசுப் பள்ளி மாணவி: அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்
சென்னை: அரசுப் பள்ளி மாணவி 11ம் வகுப்பு படிக்க அமெரிக்கா சென்றுள்ளார் என அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; அமெரிக்க வெளியுறவு துறை நிதியுதவி வழங்கும் ‘The Kennedy-Lugar Youth Exchange and Study(YES)’ எனும் திட்டத்தின் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார் ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவி தட்சண்யா. பண்பாடு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான இத்திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் ஓராண்டு பள்ளிப் படிப்பை மேற்கொள்ளவுள்ள மாணவி தட்சண்யா, 11-ஆம் வகுப்பை, Belton-ல் உள்ள Heartland பள்ளியில் படித்து வருகிறார். 12-ஆம் வகுப்பை தமிழ்நாட்டில் தொடர்வார் என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement