2026-27ம் கல்வியாண்டு முதல் படிப்படியாக பாடத் திட்டங்கள் மாற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை : 2026-27ம் கல்வியாண்டு முதல் படிப்படியாக பாடத் திட்டங்கள் மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "செய்முறையாக கற்றல் எப்படி இருக்க வேண்டும், அதனை எப்படி செயல்படுத்த வேண்டும் என ஆலோசித்தோம். கற்றலும் கற்பித்தலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; புரிதலுடன் செய்முறையாக கற்றல் இருக்க வேண்டும்,"என்று கூறினார்.
Advertisement
Advertisement