3.80 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.128.43 கோடி நிதி: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு
சென்னை: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த டிசம்பர் 2023 முதல் மார்ச் 2025 வரை தமிழ்நாடு அரசிடம் இருந்து ரூ.407.66 கோடி பால் கொள்முதல் ஊக்கத்தொகை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3.80 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்து தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகளவில் பால் வழங்கி வருகின்றனர்.
மேலும் தற்போது ஏப்ரல் 2025 முதல் ஜூன் 2025 வரையிலான காலத்திற்கு பால் கொள்முதல் ஊக்கத்தொகையாக ரூ.128.43 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் பால் உற்பத்தி தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு, ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கி மென்மேலும் பொருளாதார மேம்பாடு அடைந்திட ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.