இந்திய விமானப் படையில் இருந்து மிக் 21 ரக போர் விமானங்கள் விடைபெற்றன
சண்டிகர்: இந்திய விமானப் படையில் இருந்து மிக் 21 ரக போர் விமானங்கள் விடைபெற்றன. இந்திய விமானப் படையில் ஆற்றிய 62 ஆண்டுகால சேவை முடிவுக்கு வந்தது. இந்திய ராணுவத்தில் 62 ஆண்டுகள் மிக் 21 ரக போர் விமானங்கள் சேவையாற்றின. மிக் 21 ரக போர் விமானங்களுக்கு பதில் இந்திய ராணுவத்தில் தேஜஸ் போர் விமானங்கள் இடம்பிடித்துள்ளது. 1963ல் விமானப்படையில் சேர்க்கப்பட்டதில் இருந்து ராணுவ நடவடிக்கைகளில் மிக்-21 முக்கிய பங்கு வகித்தது. அந்த நாள் முதல், இதுவரை சுமார் 1,200 மிக் 21 பேர் விமானங்கள் நம் நாட்டைக் காக்கும் பணியை செய்து வந்தன.
பாகிஸ்தான் போர் முதல், கார்கில் போர், ஆப்ரேஷன் சிந்தூர் வரை அனைத்திலும் பங்காற்றியவை 'வானின் காவலன்' (மிக் 21) ரக விமானங்கள். சுமார் 11,000க்கும் மேற்பட்ட மிக்-21 விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் மிக அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட supersonic விமானம் என்ற பெருமையை பெற்றது. அதேபோல கடந்த 60 ஆண்டுகளில் சுமார் 293 மிக்-21 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்துகளில் 200க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்களும், 40க்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
விபத்துகளைக் குறைக்கவும், விமானப்படையின் நவீனமயமாக்கலுக்காகவும், மிக்-21 விமானங்கள் படிப்படியாக நீக்கப்பட்டன. இந்நிலையில் இந்திய விமானப் படையில் இருந்து மிக் 21 ரக போர் விமானங்கள் விடைபெற்றன. ராணுவத்தில் இருந்து மிக் 21 ரக போர் விமானம் விடைபெறும் நிகழ்ச்சி சண்டிகரில் நடைபெற்றது. மிக் 21 ரக போர் விமானங்களுக்கு பதில் இந்திய ராணுவத்தில் தேஜஸ் போர் விமானங்கள் இடம்பிடித்துள்ளது. 1963ஆம் ஆண்டு இந்திய விமானப் படை தளத்தில் மிக் 21 ரக விமானங்கள் இணைக்கும் நிகழ்வானது இந்த சண்டீகரில்தான் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.