மெக்ஸிகோ கடற்கரையில் கரை ஒதுங்கும் DoomsDay Fish..கலக்கத்தில் மக்கள்..!!
இந்த DoomsDay மீன்கள் கரை ஒதுங்கினாலே ஏதோ ஒரு இயற்கை பேரழிவு ஏற்பட போகிறது என்று அர்த்தமாம். ஆழ்கடலில் மட்டுமே காணப்படும் இந்த DoomsDay மீன்கள் நீல ரிப்பன் போன்ற உடலமைப்புடன் காணப்படுகின்றன. ஆரஞ்ச் நிற துடுப்புகளையும் கொண்டுள்ளன. DoomsDay மீன்கள் மெல்லிய உடலையும், 36 அடி நீளம் வரையிலும் வளரக்கூடிய இந்த அரியவகை மீன்கள் கடலில் 656 அடி முதல் 3280 அடி வரையிலான ஆழத்தில் வாழக்கூடியவை மிகவும் அரிதாகவே காணப்படும் இந்த மீன்களை ஜப்பானிய புராண கதைகளில் கடவுளின் தூதர் என வருணிக்கின்றனர். பெரும்பாலும் இயற்கை பேரழிவு காலங்களில் தான் இவை கரை ஒதுங்கும் என்றும் நம்புகின்றனர். உதாரணத்திற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவை சொல்கின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் மிக பெரிய அளவிலான சுனாமி ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
உலகளவில் மிக பெரிய பேரழிவாக கருதப்பட்ட இந்த சுனாமி ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக சுமார் 20 DoomsDay மீன்கள் இறந்த நிலையில் ஜப்பான் நாட்டு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளன. அதனை தொடர்ந்தே மிக பெரிய அளவில் சுனாமி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் மெக்சிகோவின் பசுபிக் கடற்கரையில் பஜஸூர் என்ற ஆழமற்ற நீரில் ஒரே ஒரு oomsDay மீன் கரை ஒதுங்கியது. கடற்கரைக்கு சென்ற சிலர் கரையில் நீந்திய அந்த வகை மீனை கண்டு அதிர்ச்சி அடைந்து விடியோவாக பதிவு செய்தனர். தொடர்ந்து மெக்சிகோவின் கடல் பகுதியில் இவ்வகை மீன்கள் சமீப காலமாக கரை ஒதுங்கி வருகின்றன. இதனை அடுத்து தான் அசம்பாவிதம் ஏற்படுமோ என மெக்சிகோ மக்கள் மட்டுமல்லாது உலக மக்களும் அதிர்ச்சியோடு கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இவை அனைத்தும் கட்டுக்கதை எனவும் கடலில் ஏற்படும் எல்மினோ மற்றும் லாநினா போன்ற மாற்றங்களினால் மட்டுமே இவை இறந்து கரை ஒதுங்குவதாக அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.