மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது
மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு நேற்று 7வது நாளாக 6,500 கனஅடியாக நீடித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 6,456 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6278 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு 15,400 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 116.41 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 115.88 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 87.05 டிஎம்சியாக உள்ளது.
Advertisement
Advertisement