மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29,360 கன அடியில் இருந்து 31,854 கன அடியாக அதிகரிப்பு
சேலம்: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29,360 கன அடியில் இருந்து 31,854 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 119.23 அடியாக அதிகரிப்பு; நீர் இருப்பு 92.24 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக 23,300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்துக்கு 20,000 கனஅடி, மேற்கு கிழக்கு கால்வாய் வழியாக 800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement