மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது
மேட்டூர்: ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 14,000 கனஅடியாக இருந்து நீர்வரத்து, நேற்று காலை 6,500 கனஅடியாக சரிந்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 15,040 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 9,263 கனஅடியாக சரிந்துள்ளது.
Advertisement
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 10,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.02 அடியில் இருந்து, நேற்று காலை 118.99 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 91.86 டிஎம்சியாக உள்ளது.
Advertisement