மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 50,000 கன அடியாக குறைப்பு
09:08 AM Aug 05, 2024 IST
Share
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 70,000 கன அடியில் இருந்து 50,000 கன அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 73,330 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.630 டி.எம்.சி ஆகவும் உள்ளது.