மேட்டூர் நீர்மட்டம் 115 அடியாக உயர்வு: 24 மணி நேரமும் கண்காணிக்க அறிவுரை
மேட்டூர்: ெதாடர் மழையால், 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று காலை 115.32 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்தும், திறப்பும் இதே நிலையில் நீடித்தால், 8 நாட்களில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார், நேற்று மேட்டூர் அணையின் வலது மற்றும் இடது கரை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சுரங்கத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
நீர்வளத் துறையின் சேலம் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன் ஆகியோருடன், அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, அணையின் வலது கரையிலும், இடது கரையிலும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், உபரி நீரை திறக்க தயார் நிலையில் குழுக்களை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.