மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(38). இவர், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் மெக்கானிக்கல் பிரிவில் பணியாற்றி வந்தார். நேற்று காலை அனல்மின் நிலைய முதலாவது பிரிவில் உள்ள கன்வேயர் பெல்ட் ஜங்சன் டவரில் பணியில் ஈடுபட்டிருந்தார். சுமார் 30 அடி உயரத்தில் இரும்பினால் அமைக்கப்பட்டிருந்த தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, துருப் பிடித்த தகடு விலகியதில் பிடி நழுவி தலைக்குப்புற கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். கார்த்திக்கிற்கு ரேவதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
Advertisement
Advertisement