மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,199 கனஅடியில் இருந்து 22,601 கனஅடியாக அதிகரிப்பு
08:58 AM Sep 02, 2024 IST
Share
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,199 கனஅடியில் இருந்து 22,601 கனஅடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 13,500 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 700 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 116.27 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 87.646 டிஎம்சியாகவும் உள்ளது.