மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 822 கன அடியாக உயர்வு..!!
05:50 PM May 17, 2024 IST
Share
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 137 கன அடியில் இருந்து 822 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 49.88 அடியாக உள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக 2,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.