மேட்டூர் அணை: நீர்வரத்து 8,342 கன அடியாக சரிவு
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8641 கன அடியில் இருந்து 8342 கன அடியாக சரிந்தது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 119.75 அடி; நீர் இருப்பு 91.49 டி.எம்.சி. மேட்டூர் அணையிலிருந்து மொத்தமாக 13,800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்திற்காக 13,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement